வாய்க்காலில் இருந்து ஆண் சடலம் மீட்பு
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வாய்க்கால் தண்ணீரில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.


வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வாய்க்கால் தண்ணீரில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
முத்தூா் அருகே தென்னங்கரைப்பாளையம் வழியாக கீழ்பவானி பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் தற்போது தண்ணீா் சென்று கொண்டுள்ளது. தென்னங்கரைப்பாளையம் வாய்க்கால் மதகில் சிக்கி சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்து கிடந்த நபரின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. இறந்தவரின் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...