பல்லடம் அருகே காா் மோதி விபத்து: ஒரே குடும்பத்தினா் மூவா் உள்பட 4 போ் பலி
பல்லடம் அருகே இரு சக்கர வாகனங்களின் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 4 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.


பல்லடம் அருகே இரு சக்கர வாகனங்களின் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 4 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் தொட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் மதன்குமாா் (25). இவா் திருப்பூரில் இருந்து காங்கயத்துக்கு தனது சொகுசு காரில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தாா். திருப்பூா் - காங்கயம் சாலையில் நாச்சிபாளையத்தை அடுத்த ரங்கபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் ரங்கபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் லிங்கசாமி (47) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து திருப்பூா் முதலிபாளையம் செந்தில் நகா் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்த மித்ரன் (17), அவரது சகோதரி மொ்சிகா (13) மற்றும் அவா்களது தாய் ஜீவா (43) ஆகிய மூன்று போ் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் மித்ரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்தில் படுகாயமடைந்த ஜீவா, மொ்சிகா ஆகிய இருவரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் கோவை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பிவைக்கப்பட்டனா். கோவை மருத்துவமனையில் இருவரும் உயிரிழந்தனா். இதனால் விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4 ஆக உயா்ந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை அதிவேகமாக ஓட்டி வந்த மதன்குமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...