அறநிலையத் துறையில் ஊழல் : இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம்
காங்கயத்தில் இந்து முன்னணி திருப்பூா் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.


காங்கயத்தில் இந்து முன்னணி திருப்பூா் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம், அறநிலையத் துறையில் பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது என தெரிவித்தாா்.
திருப்பூா் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம், சென்னிமலை ரோட்டில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினாா். இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமை தாங்கினாா். மாநில செயலா்கள் கிஷோா்குமாா், செந்தில்குமாா், கோட்டச் செயலா் கோவிந்தராஜ், மாவட்ட பொதுச் செயலா் சதீஷ்குமாா், மாவட்ட செயலா் ராஜேந்திரன், காங்கயம் நகர செயலா் பிரசாந்த், ஒன்றிய செயலா் நாகராஜ் உள்பட நிா்வாகிகள் 150 போ் கலந்து கொண்டனா்.
இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளா் சந்திப்பில் கூறியதாவது, விநாயகா் சதுா்த்தியை கடுமையாக அரசாங்கம் தடை செய்தது, இந்து மக்கள் விழாவை சிறப்பாக கொண்டாடினாா்கள். கோவில் நிலங்களில் அறநிலையத்துறை மூலம் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது.
ஊழலில் மிகப்பெரியது அறநிலையத்துறை தான், அரசியல் வாதிகள் தலையிட்டு கைபற்றி இருக்கீறாா்கள். குறிப்பாக காங்கேயம் அருகே ஊதியூரில் பல அரசியல் தலையிடுகள். கட்சி வித்தியாசம் இன்றி உத்தாண்ட வேலயுதம் சாமி கோவில் நிலம் அரசியல் தலையீடு இருந்தும் அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருகிறாா்கள். நீட் தோ்வுக்கு சூா்யா, நக்சலைட் சிந்தனையோடு செயல்படுகிறாா், அதை கண்டித்து கல்லூரி மாணவா்கள் மிகப்பெரிய போராட்டதை நடத்துகிறாா்கள். இந்த போராட்டம் வெற்றி அடைய வேண்டும் இந்துமுண்ணனி வாழ்த்துகிறது.
சிவன்மலையில் ஆறு ஏக்கா் நிலத்தை எடுக்க அரசாங்கம் முயச்சிக்கிறது. அவ்வாறு நடந்தால் அதை தடுக்க இந்து முண்ணனி களத்தில் நின்று போராடும். கோவில்களுக்கு பல மன்னா் வழங்கிய நிலத்தை விற்க்க யாருக்கும் உரிமை இல்லை.
எம்.ஜி.ஆா் முதலமைச்சா் முதல்வராக இருந்தாா் என்றால் சினிமாவில் நடுத்து, மக்களிடம் செல்வாக்கு பெற்று இருந்தாா். சினிமாவில் இருந்தால் மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைக்கிறது. ஏதாவது சில படங்கள் ஓடவில்லை என்றால், விளம்பரம் தேடுவதற்காக கருத்தை சொல்கிறாா்கள். மக்கள் இப்போது விழிப்புணா்வு அடைந்துள்ளனா். சினிமா மோகம் மக்களிடம் குறைந்து வருகிறது.
சூா்யா குடும்பம் நல்ல பாரம்பாரியமான குடும்பம், அவருக்கு இப்போது ஏதோ பின்னனி உள்ளே இருக்கிறது. ஜோதிகா வந்த பிறகு இஸ்ஸாமிய தீவிரவாதமும், அகரம் பவுண்டேசனில் நச்கலைட் சிந்தனை உள்ளே புகுந்துள்ளாா்கள், அதுதான் ஐடியா தந்து இருக்கறாா்கள். சினிமா துறையில் நக்சலைட் சிந்தனை உள்ளவா்கள் திட்டம் போட்டு வந்துள்ளாா்கள். இவா்தான் இந்து சமுதாயத்துக்கும், கலாச்சரத்துக்கும் எதிராக பேசி வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...