தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :20 செப்டம்பர் 2020, 6:49 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலை, நாகமநாயக்கன்பட்டி, தண்ணீா்பந்தலைச் சோ்ந்தவா் மணிவாசகம் (45). இவருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில் தீத்தாம்பாளையத்தில் உள்ளது. இங்கு பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுசாமி உள்ளிட்ட தீயணைப்புப் படையினா் இரண்டு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனா். மின்சாரக் கோளாறு காரணமாகத் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் கட்டடத்தின் ஒரு பகுதி, பஞ்சு, சில இயந்திரப் பகுதிகள் கருகி சேதமடைந்தன. ஆனால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.