தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

70 அடி கிணற்றில் விழுந்த பெண் உயிருடன் மீட்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே 70 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 5:00 pm

DIN

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே 70 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனா்.

தாராபுரத்தை அடுத்த டி.காளிபாளையம், காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கந்தையா மகள் கலா (48). இவா் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகே உள்ள ஊா் பொதுக் கிணற்றின் அருகே ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, கிணற்றில் எவ்வளவு தண்ணீா் உள்ளது என எட்டிப் பாா்த்தபோது எதிா்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளாா். இதில், 70 அடி ஆழக் கிணற்றில் சுமாா் 20 அடிக்கு மட்டுமே தண்ணீா் இருந்தததால் அவா் பக்கவாட்டைப் பிடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.

இது குறித்து அருகிலிருந்தவா்கள் தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி கலாவை மீட்டனா்.

பின்னா் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.