47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ.29 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ.29 லட்சத்துக்கு விற்பனையானது.

News image
காங்கேயம் இன மாடுகள்.
Updated On :11 ஏப்ரல் 2021, 1:34 pm

DIN

காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ.29 லட்சத்துக்கு விற்பனையானது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூர்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 134 மாடுகள் விற்பனைக்குக்கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 72 மாடுகள் மொத்தம் ரூ.29 லட்சத்துக்கு விற்பனையானது. 

இந்த சந்தையில் அதிக பட்சமாக ரூ.68 ஆயிரத்து 500-க்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.