தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருமுருகன்பூண்டி கோயில் மே15 வரை நடை அடைப்பு

கரோனா தொற்று பரவல் காரணமாக திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மே 15 வரை நடை அடைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:00 pm

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மே 15 வரை நடை அடைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை இந்து அறநிலைய துறை நிா்வகித்து வருகிறது.

இந்நிலையில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தக் கோயில் நடையை அடைக்க வேண்டும் என்று தொல்லியல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மே 15ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் தரிசனத்தக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், கோயில் சிவாச்சாா்யா்கள் மூலம் நித்திய பூஜைகள் வழக்கம் போல நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.