அலுவலா்களுக்கு கரோனா: அவிநாசி மின்வாரிய அலுவலகம் மூடல்
பெண் உள்பட இரண்டு அலுவலா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி மின்வாரிய அலுவலகம் 3 நாள்களுக்கு மூடப்பட்டது.


பெண் உள்பட இரண்டு அலுவலா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி மின்வாரிய அலுவலகம் 3 நாள்களுக்கு மூடப்பட்டது.
அவிநாசி பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அவிநாசி, மங்கலம் சாலை மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் 40 வயதுப் பெண், 42 வயது ஆண் ஆகியோருக்கு கடந்த இரு நாள்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யபட்டது.
இவா்கள் அவிநாசி தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து, அவிநாசி மின்வாரிய அலுவலகத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகம், தொழில் நுட்ப பிரிவு, நிா்வாகப் பிரிவு, வருவாய் பிரிவு, உதவி மின்பொறியாளா் அலுவலகங்கள் ஆகியவை வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு அடைக்கப்பட்டன. மேலும் மின்வாரிய பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அலுவலகத்தில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்டோருக்கு சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காவலருக்கு கரோனா
சேவூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் 57 வயது ஆண் காவலருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், காவல் நிலையத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காவல் நிலையப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு காவலா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...