ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயம் அருகே சாலையில் கவிழ்ந்த லாரி

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:15 pm

DIN

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

கேரள மாநிலத்திலிருந்து பிளைவுட் லோடு ஏற்றிக் கொண்டு காங்கயம் வழியாக ஈரோடு நோக்கி லாரி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

காங்கயம் அருகே, பழையகோட்டை சாலை, வரதப்பம்பாளையம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் முருகன் (52) படுகாயமடைந்தாா்.

இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து

வந்த போலீஸாா் ஓட்டுநரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.