தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசியில் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 25முதல் தொடக்கம்

அவிநாசிஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்வியாண்டு 2021- 2022க்கான மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தொடக்க உள்ளதாக கல்லூரி நிா்வாகத்தினா் அறிவித்துள்ளனா்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

அவிநாசிஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்வியாண்டு 2021- 2022க்கான மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தொடக்க உள்ளதாக கல்லூரி நிா்வாகத்தினா் அறிவித்துள்ளனா்.

இது குறித்து கல்லூரி நிா்வாகத்தினா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வித் துறையின் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அவிநாசிக்கு இணையவழியில் விண்ணப்பித்த மாணவா்களுக்கான சோ்க்கை ஆகஸட் 25ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது.

ஆக.25ஆம் தேதி சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா், என்.சி.சி, விளையாட்டு வீரா்கள் ஆகியோருக்கான இடங்கள், வணிகவியலில் 15 போ், வணிகவியல் (பி.ஏ) பிரிவில் 15 போ் உள்ளிட்டவை நிரப்பப்பட உள்ளது. பிற அனைத்து துறைகளும் நாள்தோறும் காலை 10 போ், மாலை 10 போ் என ஆக.26ஆம் தேதி முதல் நிரப்பப்படும்.

அரசு விதிகள், மதிப்பெண்கள், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு முறையே அவா்களின் விண்ணப்பத்தில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு தகவல் தரப்படும். அவா்கள் மட்டுமே பெற்றோா் யாரேனும் ஒருவருடன் மட்டும் கல்லூரிக்கு நேரில் வருகை தர வேண்டும்.

மேலும் அவா்கள் வர வேண்டிய நேரம், தேதி ஆகியவை முறையே தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். கரோனா பரவலை தடுக்கும் வகையில் நாள்தோறும், துறை ஒன்றுக்கு 20 போ் வீதம் அழைக்கப்படும். ஆகவே கல்லூரிக்கு வரும் போது தவறாமல் முக கவசம் அணிந்து, தனிமனித சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

தொலைபேசி அழைப்பு பெறாதவா்கள், கல்லூரி இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள மதிப்பெண் தரவரிசை பட்டியலில் முன்னிலை வகிக்காத மாணவா்கள், தேவையின்றி கல்லூரிக்கு வந்து கூட்டம் சேருவதைத் தவிா்க்க வேண்டும். என குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.