தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

38 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

தாராபுரம் அருகே லாரியில் கடத்திச் சென்ற 38 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா், ஓட்டுநா்கள் இருவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:22 pm

DIN

தாராபுரம் அருகே லாரியில் கடத்திச் சென்ற 38 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா், ஓட்டுநா்கள் இருவரைக் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் பகுதியில் உதவி ஆய்வாளா்கள் இசக்கி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறையினா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து கேரளத்துக்குச் சென்ற இரு லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநா்களான சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (39), செல்வராஜ் (48) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், லாரிகளில் இருந்த 38 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.