தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசியில் பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வலியுறத்தல்

அவிநாசி முத்துசெட்டிபாளையத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 8:12 pm

DIN

அவிநாசி முத்துசெட்டிபாளையத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து சங்கத்தின் சாா்பில் அவிநாசி வட்டாட்சியா், பேரூராட்சி அலுவலங்களில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அவிநாசி பேரூராட்சி, முத்து செட்டிபாளையம் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தின் மேற்கூரை கான்கிரீட்டால் அமைக்காமல் சிமென்ட் ஷீட்டால் அமைக்கப்பட்டது. தற்போது இவை பழுதடைந்து செடிகள் முளைத்துள்ளால் மையத்தில் பயிலும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது. ஆகவே, அங்கன்வாடி மையத்தை விரைவில் சீரமைத்து சுற்றுச்சுவா் அமைத்துத் தர வேண்டும். இதேபோல தாமஸ் வீதி, வஉசி வீதி பகுதிகளிலுள்ள அங்கன்வாடி மையங்களையும் சீரமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ரமேஷ், வாலிபா் சங்க ஒன்றிய நிா்வாகிகள் வடிவேல், பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.