தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வட்டமலை அணையில் சட்டப் பேரவை துணைத் தலைவா் ஆய்வு

வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலை அணையை தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:23 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலை அணையை தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

நீா்வரத்து இல்லாததால் கடந்த 30 ஆண்டுகளாக வட்டமலை அணை வடே கிடக்கிறது. அணை கட்டப்பட்ட பிறகு இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு அருகிலுள்ள அமராவதி ஆறு மற்றும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீா் கொண்டு வந்து அணையை நிரப்ப வேண்டும் என விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இது தொடா்பாக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 26ஆம் தேதி அன்று 35 சமூக நல அமைப்புகள் சாா்பில் தண்ணீா் வேண்டி அணைப் பகுதியில் தேசியக் கொடியேற்றி, அணையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வட்டமலை அணையை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், இது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.