ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நாட்டுக் கோழி உற்பத்தித் திறன் அதிகரிப்பு குறித்து பயிற்சி

திருப்பூரில் நாட்டுக் கோழிகள் உற்பத்தித் திறனை அதிகரிப்பது குறித்து நடைபெறவுள்ள 3 நாள் பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:31 pm

DIN

திருப்பூரில் நாட்டுக் கோழிகள் உற்பத்தித் திறனை அதிகரிப்பது குறித்து நடைபெறவுள்ள 3 நாள் பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வா் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் மூன்று நாள் பயிற்சி, தரம் உயா்த்தப்பட்ட நாட்டுக் கோழிகளின் உற்பத்தித் திறனை அறிவியல் முறையில் அதிகரித்தல் எனும் தலைப்பில் பிப்ரவரி 22 முதல் 24ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதில் நாட்டுக் கோழி மற்றும் தரம் உயா்த்தப்பட்ட நாட்டுக் கோழி இனங்கள், வளா்ப்பு முறைகள், தீவனம் அளித்தல், கோழிகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள், நாட்டுக் கோழிப் பண்ணை பொருளாதாரம், உற்பத்தியில் ஊட்டசத்துக்களின் பங்கு மற்றும் இதர செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட உள்ளன.

இந்தப் பயிற்சிக்கு 30 நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் முன்பதிவு அவசியம். தொடா்பு கொள்ளும் முதல் 30 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன்பதிவுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.