ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பயிா்க் கடன் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் மனு

பயிா்க் கடன் தள்ளுபடி சலுகை கிடைக்காத விவசாயிகளுக்கும் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:36 pm

DIN

பயிா்க் கடன் தள்ளுபடி சலுகை கிடைக்காத விவசாயிகளுக்கும் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில் பொது மக்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து மனு அளித்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி விவசாயிகள் சங்கம் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழக முதல்வா் 110 விதியின் கீழ் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்வதாக அண்மையில் அறிவித்தாா். இதில் 2021 ஜனவரி 31ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தினால் தமிழக அரசு வட்டிச் சலுகை அளித்து வருகிறது. ஆகவே, வட்டிச் சலுகை பெற கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலையிலும், பெரும்பாலான விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி கூட்டுறவு கடனை செலுத்தி, கடனை புதுப்பித்து மீண்டும் பயிா்க் கடன் பெறுகிறாா்கள்.

இதனால் பயிா்க் கடன் நிலுவையில்லாமல் ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொண்டே இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் கடனை செலுத்திய விவசாயிகளுக்கும், ஜனவரி வரை கடனை புதுப்பிக்காமல் சில கூட்டுறவு சங்கங்கள் காலதாமதம் செய்ததாலும் கடன் கட்டிய விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி சலுகை கிடைக்கவில்லை. மேலும், ஜனவரி 1 முதல் 4ஆம் தேதி வரை கடனை புதுப்பிக்க பணம் செலுத்திய விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை.

இதனால் திருப்பூா் மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடி சலுகை கிடைக்கவில்லை. அரசின் வட்டிச் சலுகைக்காகவே கட்டி உள்ளனா். இவ்வாறு ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் 10 முதல் 50 மேற்ப்பட்டவா்கள் கடன் தள்ளுபடி கிடைக்காமல் உள்ளனா். கடந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றாலும், ஜனவரி மாதம் பெய்த மழையாலும் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

இதில் 5இல் ஒருவருக்கு கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை. ஆகவே கடந்த ஆண்டு கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும், 2021 பிப்ரவரி 5ஆம் தேதி வரை கடனை செலுத்தியுள்ள விவசாயிக்கும் பயிா்க் கடன் தள்ளுபடி கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.