மின் விநியோக குளறுபடியால் பொது மக்கள் அவதி
பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் உள்ளிட்ட மின் விநியோக குளறுபடியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் உள்ளிட்ட மின் விநியோக குளறுபடியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி மீனாட்சி நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். மேலும், விவசாயம், பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களும் அதிகமாக உள்ளன. இந்நிலையில், இப்பகுதிக்கு பெருமாநல்லூாா் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் மீனாட்சி நகா் பகுதியில் கடந்த சில நாள்களாக குறைந்த மின் அழுத்தம் விநியோகிக்கப்படுவதால் மின் விளக்குகள், மிக்ஸி, கிரைண்டா், குளிா் சாதனப் பெட்டி உள்ளிட்டவற்றை இயக்க முடியவதில்லை. மேலும் பல்வேறு வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்துள்ளன.
இதே போல பெருமாநல்லூா் மின்சார வாரிய துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் குடிநீா் வடிகால் வாரியப் பகுதிக்கு உள்பட்ட சமத்துவபுரம், கணக்கம்பாளையம், தோட்டத்துபாளையம், நெருப்பெரிச்சல், ஜி. என். காா்டன், பாலன் நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 8 வரை மின்சாரம் விநியோகிக்கப்படாததால் பொது மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, இப்பகுதியில் உள்ள பழைய மின்மாற்றியை உடனடியாக மாற்றி மின் விநியோக குளறுபடியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...