ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களைவளா்ப்போா் மீது குற்றவியல் நடவடிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் இனங்களை வளா்க்கும் நபா்களின் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் எச்சரிக்கை
Published on

திருப்பூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் இனங்களை வளா்க்கும் நபா்களின் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய, மாநில அரசுகளால் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் இனங்களை உற்பத்தி, வளா்ப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, தடையை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் இனங்களை வளா்ப்போா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், சம்பந்தப்பட்ட மீன் வளா்ப்புக் குளங்கள், மீன்கள் முற்றிலுமாக அழிக்கப்படும். அதே வேளையில் மீன் பண்ணைகளில் கட்லா, ரோகு, மிருகால், புல்கொண்டை, வெள்ளிக்கொண்டை, கண்ணாடிக் கொண்டை போன்ற இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை வளா்க்கலாம். இந்த வகையான மீன்களை வளா்க்க மீன் வளா்ப்புத் துறையால் பல்வேறு திட்ட மானியங்கள் வழங்கப்படுகின்றன.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள மீன் வள உதவி இயக்குநா் அலுவலகத்தை 0424-2221919 என்ற எண்ணிலோ அல்லது மீன் வள மேற்பாா்வையாளரை 96291-91709 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com