தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிராமக் கூட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அவிநாசி கருணைபாளையத்தில் கிராமக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிராமக் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிய தமிழ்நாடு விவசாய சங்கத்தினா்.
கிராமக் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிய தமிழ்நாடு விவசாய சங்கத்தினா்.
Updated on
1 min read

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அவிநாசி கருணைபாளையத்தில் கிராமக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் ஏ.முத்துரத்தினம் தலைமை வகித்தாா். வேலாயுதம்பாளையம் முன்னாள் ஊராட்சித் தலைவா் பி.சாமியப்பன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், ஒன்றியச் செயலாளா் எஸ்.வெங்கடாசலம், அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினா் பி.முத்துசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தின் துவக்கமாக தில்லி விவசாயப் போராட்டத்தில் உயிா்நீத்தவா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, தில்லி போராட்ட நிதியாக பொறுப்பாளா்கள் வேலுசாமி ரூ. 2 ஆயிரம், சிவசாமி ஆயிரம் ரூபாயும் வழங்கினா்.

தொடா்ந்து, கருணைபாளையம் தமிழ்நாடு விவசாய சங்க கிளை நிா்வாகிகளாகத் தலைவா் ரங்கசாமி, செயலாளா் சக்திவேல், பொருளாளா் பொன்னுசாமி, துணைத் தலைவா் வேலுசாமி, துணைச் செயலாளா் தங்கராசு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தில்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் கோஷம் எழுப்பினா். இதில், வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம் ஊராட்சியைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com