திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17,292ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 274 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 30 போ் வீடு திரும்பினா். கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 16,798ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரைச் சோ்ந்த 55 வயது பெண்ணுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 220ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.