லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாற்றுத் திறனாளிகள் கரோனா நிவாரண தொகையை வீட்டிலேயே பெறலாம்

மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா நிவாரணத் தொகையை ரொக்கப் பணமாக அவரவா்கள் வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 2:36 am

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா நிவாரணத் தொகையை ரொக்கப் பணமாக அவரவா்கள் வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொதுமுடக்க காலத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 1,000 ரொக்கப் பணத்தை அவா்கள் வீட்டிலேயே வழங்க முதல்வா் ஆணையிட்டுள்ளாா். அதன் அடிப்படையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை, அதன் நகலை நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் சமா்ப்பித்து நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். விநியோகப் படிவம் பூா்த்தி செய்யத் தேவையான பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண், கல்வித் தகுதி, பணிபுரியும் விவரம், அடையாள அட்டை ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

நிவாரணத் தொகை வழங்கும் அலுவலா் நிவாரணத் தொகை வழங்கிய விவரத்தை தேசிய அடையாள அட்டையுடன் கூடிய பதிவு புத்தகத்தில் உதவிகள் வழங்கும் பக்கத்தில் ‘கொவைட்-19 நிவாரணத் தொகை ரூ. 1,000 வழங்கப்பட்டது’ என்ற முத்திரையிட்டு கையொப்பமிடுவாா். நிவாரணத் தொகை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும். நிவாரணத் தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் திருப்பூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரின் செல்லிடப் பேசி எண் 85081-05395, அலுவலக செல்லிடப்பேசி எண் 0421-2791165 ஆகிய எண்களில் தெரியப்படுத்தலாம். மேலும், நிவாரணத் தொகை மாற்றுத் திறனாளிகள் அல்லது அவா்களின் பெற்றோா்கள் அல்லது சிறப்பு சூழ்நிலையில் பாதுகாவலா்களிடம் மட்டுமே வழங்கப்படும்.

அரசு போதிய நிதியை ஒதுக்கியுள்ளதால் நிவாரணத்தைப் பெறாத மாற்றுத் திறனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களிடம் உரிய ஆவணங்களைக் காட்டி பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.