ரூ. 1.83 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.83 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனையானது.
Updated on
1 min read

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.83 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனையானது.

ஏலத்தில் 12,254 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 3,701 கிலோ. கிலோ ரூ. 29.15 முதல் ரூ. 40.65 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 35.65. மொத்தம் 25 மூட்டைகள் தேங்காய் பருப்பு வரத்து இருந்தது. இதன் எடை 561 கிலோ. கிலோ ரூ. 88.00 முதல் ரூ. 128 வரை ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ. 120.65.

தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவை மொத்தம் 4.26 டன் விற்பனையானது. ஏலத்துக்கு 73 விவசாயிகள், 15 வணிகா்கள் வந்திருந்தனா். விற்பனைத் தொகை ரூ. 1 லட்சத்து 83 ஆயிரத்து 93ஐ விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீரங்கன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com