மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கீழ்பவானி வாய்க்காலில் கான்க்ரீட் போடும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: நமது கொங்கு முன்னேற்றக் கழகம் கோரிக்கை

காங்கயம் வழியாகச் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கான்க்ரீட் போடும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என நமது கொங்கு முன்னேற்றக் கழகம் தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளது.

News image
காங்கயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் நமது கொங்கு முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலர் காங்கயம் எம்.தங்கவேல்.
Updated On :10 ஜனவரி 2021, 11:27 am

DIN

காங்கயம்: காங்கயம் வழியாகச் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கான்க்ரீட் போடும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என நமது கொங்கு முன்னேற்றக் கழகம் தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளது.

நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இக்கட்சியின் பொதுச் செயலர் காங்கயம் எம்.தங்கவேல் தலைமை வகித்தார். அவைத் தலைவர் முருகசாமி, மாநில அமைப்பாளர் யுவராஜ்குமார், மாநில இளைஞரணி செயலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், காங்கயம் வழியாகச் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் இப்பகுதி நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரங்களைப் பாதிக்கும் வகையில் கான்க்ரீட் போடும் திட்டத்தைக் கைவிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துவது, காங்கயம் நகரில் காளை மாடு சிலை அமைக்கவுள்ளோம் என்ற முதல்வரின் அறிவிப்பை வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்த வேண்டும், ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் திறப்பு விழாவுக்குத் தயாரான நிலையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வெண்கலத்தாலான உருவச் சிலையைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் செந்தில்குமார், வேலுமணி, சௌந்தரராஜன் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.