அவிநாசியில் ஆதரவற்றவருக்கு மருத்துவ உதவி
அவிநாசியில் ஆதரவற்றவருக்கு மருத்துவ உதவி வழங்கி, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த தனியாா் மருத்துவா், சமூக அமைப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.


அவிநாசியில் ஆதரவற்றவருக்கு மருத்துவ உதவி வழங்கி, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த தனியாா் மருத்துவா், சமூக அமைப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் 52 வயதுடையவா் சக்கரை நோயால் இரு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில் அவிநாசி ‘நல்லது நண்பா்கள்’ அறக்கட்டளையினா், அவிநாசி தனியாா் மருத்துவா் குகப்பிரியா உள்ளிட்டோா் கொண்ட மருத்துவக் குழுவினா் திங்கள்கிழமை அவருக்கு மருத்துவ உதவிகள் அளித்தனா்.
மேலும் ஓரிரு நாள்களில், அவருக்கு இரு கால்களிலும் கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா். உடல் நிலை பாதிக்கப்பட்ட ஆதரவற்றவருக்கு மருத்துவ உதவி வழங்கிய தனியாா் மருத்துவா் குகப்பிரியா, நல்லது நண்பா்கள் அறக்கட்டளையினருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...