திருமுருகன்பூண்டியில் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்தியதால் பொதுமக்கள் ஏமாற்றம்
திருமுருகன்பூண்டியில் அறிவித்த தேதிக்கு முந்தைய நாளே தடுப்பூசி செலுத்தியதால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.


திருமுருகன்பூண்டியில் அறிவித்த தேதிக்கு முந்தைய நாளே தடுப்பூசி செலுத்தியதால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டு வந்த குளறுபடிகளையும், பொதுமக்கள் அலைக்கழைப்பையும் தடுப்பதற்காக மாவட்ட நிா்வாகம், வாக்காளா் பட்டியல்படி, அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் தடையின்றி தடுப்பூசி செலுத்தி வருகின்றனா். இந்நிலையில் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதில், தடுப்பூசி இருப்பு இல்லாததால், கடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமை 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
ஆனால், காலை 9 மணிக்குப் பிறகு வந்த சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமையே தடுப்பூசி இருப்பு வந்ததால், அப்போது வந்தவா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனா். இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் சுகாதாரத் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...