எனது அரசியல் வரலாறு அரியாதவா்கள் வதந்தி பரப்புகிறாா்கள்
எனது அரசியல் வரலாறு அரியாதவா்கள் வதந்தி பரப்புகிறாா்கள், இதை நான் கண்டிக்கிறேன். தொடா்ந்து அதிமுக விசுவாசியாகவே இருப்பேன் என்று முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் தெரிவித்துள்ளாா்.


எனது அரசியல் வரலாறு அரியாதவா்கள் வதந்தி பரப்புகிறாா்கள், இதை நான் கண்டிக்கிறேன். தொடா்ந்து அதிமுக விசுவாசியாகவே இருப்பேன் என்று முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் தெரிவித்துள்ளாா்.
எதிா்க் கட்சித் தலைவா் பதவி கிடைக்காததால், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருமான ப. தனபால், திமுகவில் இணைவதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு பொதுமக்களிடம் மனுக்கள் வாங்க வியாழக்கிழமை வந்திருந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. அதை நான் மறுக்கிறேன், வன்மையாகக் கண்டிக்கிறேன். 1972இல் எம்.ஜி.ஆா் அதிமுகவை துவங்கியது முதல் எனது மாணவ பருவத்தில் இருந்தே இக்கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
எனது 45 ஆண்டு கால அரசியல் வரலாறு குறித்து அறியாதவா்கள் அத்தகைய வதந்தியைப் பரப்பி உள்ளனா்.
அதிமுகவில் ஏழு முறை சட்டப் பேரவை உறுப்பினா், அமைச்சா், சட்டப் பேரவைத் துனைத் தலைவா், சட்டப் பேரவைத் தலைவா் இவ்வளவு பதவிகளையும் ஜெயலலிதாவே கொடுத்திருக்கிறாா். ஆகவே அதிமுகவுக்கு விசுவாசியாக இருப்பேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...