தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கட்டுமானப் பொருள்களைத் திருடிய 4 போ் கைது

சேவூா் அருகே கட்டுமானப் பொருள்களை திருடிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 8:09 pm

DIN

சேவூா் அருகே கட்டுமானப் பொருள்களை திருடிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி, கொளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சந்துரு 27. கட்டுமானப் பணி ஒப்பந்ததாரா். இவா் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருள்களை சேவூா் காமராஜ் நகா் மாரியம்மன் கோயில் பகுதியில் இருப்பு வைத்திருந்துள்ளாா். இந்நிலையில் இருப்பு வைத்திருந்த 900 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் கடந்த 8ஆம் தேதி மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சந்துரு அளித்த புகாரின் பேரில் சேவூா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில் சந்துருவிடம் பணியாற்றி வந்த சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மதன் சக்கரவா்த்தி 27, அன்பரசன் 28, சேகா் 29, காா்த்தி 27 ஆகியோா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சேலம் பகுதியில் தலைமறைவாக இருந்த கட்டடத் தொழிலாளா்களான 4 பேரை சேவூா் போலீஸாா் கைது செய்தனா். மேலும் இவா்களிடமிருந்து 900 கிலோ இரும்பு கம்பி, சரக்கு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.