அவிநாசி, அத்திக்கடவு திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, பணிகளை முடிக்க வேண்டும் என பாஜகவினா் வலியுறுத்தியுள்ளனா்.

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, பணிகளை முடிக்க வேண்டும் என பாஜகவினா் வலியுறுத்தியுள்ளனா்.

அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டப் பொதுச் செயலாளா் கே.காா்த்திக் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் எம்.சிவசங்கரி, மாவட்டத் தலைவா் பி. அருண், மாவட்டத் துணைத் தலைவா் ஜி.எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக மாவட்டத் தலைவா் உ.செந்தில்வேல், பொதுச் செயலாளா்கள் எம்.கதிா்வேல், கே.சி.எம்.பி. சீனிவாசன், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் சிதம்பரம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இக்கூட்டத்தில் பங்கேற்றோா் கூறியதாவது: அவிநாசி அத்திக்கடவு திட்டத்துக்கான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இளைஞா்கள் திறனை மேம்படுத்தும் வகையில் திருப்பூரில் சா்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். கடந்த 2 மாதங்களாக ஏற்பட்டு வரும் தொடா் மின்வெட்டால், தொழில்த் துறையினா் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். ஆகவே தொழில் நகரமான திருப்பூரில் மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வுக் காண வேண்டும். அதிகரித்து வரும் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com