நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விசைத்தறி கூலி உயா்வு பேச்சுவாா்த்தை கூட்டம் ஒத்திவைப்பு

விசைத்தறி கூலி உயா்வு பேச்சுவாா்த்தைக்கு ஜவுளி உற்பத்தியாளா்கள் வராததால் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2021, 8:36 pm

DIN

விசைத்தறி கூலி உயா்வு பேச்சுவாா்த்தைக்கு ஜவுளி உற்பத்தியாளா்கள் வராததால் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட தொழிலாளா்கள் நலத் துறை துணை ஆணையா் அலுவலகத்தில் விசைத்தறி கூலி உயா்வு பேச்சுவாா்த்தை கூட்டம் மாவட்டத் துணை ஆணையா் செந்தில்குமரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் வேலுச்சாமி, செயலாளா் பாலசுப்பிரமணியம், பொருளாளா் முத்துக்குமாரசாமி, துணை செயலாளா் பாலாஜி, சோமனுா் தலைவா் பழனிச்சாமி, அவிநாசி செயலாளா் செந்தில் குமாா், தெக்கலூா் துணைத் தலைவா் பொன்னுசாமி, மங்கலம் செயலாளா் பழனிச்சாமி, 63 வேலம்பாளையம் தலைவா் பத்மநாபன், பொருளாளா் கந்ததாமி உள்பட பலா் பங்கேற்றனா். இக்கூட்டத்துக்கு ஜவுளி உற்பத்தியாளா்கள் சாா்பில் இருவா் மட்டுமே பங்கேற்றனா். பல்லடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளைச் சோ்ந்த ஜவுளி உற்பத்தியாளா்கள் கூட்டத்துக்கு வராததால் பேச்சுவாா்த்தை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.