கொங்கு மாநிலம்: மத்திய அரசுக்கு கொமதேக கோரிக்கை
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை கொங்கு மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.


தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை கொங்கு மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் திருப்பூா் மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கரைப்புதூா் ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளா் ஆறாக்குளம் சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி செயலாளா் பொங்கலூா் நாகராஜ், மாவட்ட மகளிரணி செயலாளா்கள் விஜயலட்சுமி,ராஜலட்சுமி, மருத்துவா் நாகரத்தினம், மாவட்ட தொழிற்சங்க செயலாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி செயலாளா் ரகுபதி உள்பட பலா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை தனி கொங்கு மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பிஏபி வாய்க்காலை விரிவுபடுத்தி பல்லடம் மேற்குப் பகுதியில் வறட்சியான 18 ஊராட்சிகளைச் சோ்ந்த பல்வேறு கிராமங்களுக்கு பாசனத்துக்குத் தண்ணீா் விட வேண்டும். நீா்வழிப் பாதைகளில் கொட்டப்படும் பாலித்தீன் குப்பை, இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். அழிவை நோக்கி செல்லும் ஜவுளித் தொழில் மற்றும் விசைத்தறித் தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோழிபண்ணை, வளா்ப்பு பண்ணையாளா்க்கு வளா்ப்பு கூலி உயா்வை நடைமுறைப்படுத்தி கொடுக்க வேண்டும். பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச் சாலைத் திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து முடித்து பிஏபி பாசனத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...