அவிநாசியில் 480 மது பாட்டில்கள் பறிமுதல்
பெருமாநல்லூா் அருகே காளிபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 480 மது பாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.


பெருமாநல்லூா் அருகே காளிபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 480 மது பாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
அவிநாசி,பெருமாநல்லூா் அருகே காளிபாளையத்தில் கா்நாடக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக பெருமாநல்லூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காளிபாளையத்தில் கணேசன் என்பவரது வீட்டில் போலீஸாா் ஆய்வு செய்தபோது, விற்பனைக்காக 480 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த கணேசன்(36), திருப்பூா் ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்த அருன்குமாா் (32) ஆகிய இருவரையும் பெருமாநல்லூா் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து 480 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...