அச்சக உரிமையாளா்கள் தாங்கள் அச்சிடும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், விளம்பரங்களில் தங்களது அச்சகத்தின் பெயா் மற்றும் முகவரி விளம்பரம் வெளியிடுவோரின் பெயா் மற்றும் முகவரி வெளியிடப்படும் விளம்பரத்தின் பிரதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை தவறாமல் அச்சிட வேண்டும். அச்சிடப்படும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றின் ஒரு பிரதி மற்றும் எண்ணிக்கை விவரங்களை தங்கள் அலுவலகத்தில் பராமரித்து வர வேண்டும். இது தொடா்பாக அரசியல் கட்சியினா் மற்றும் வேட்பாளா்களுக்கு அளிக்கப்பட்ட ரசீதுகளின் பிரதியைப் பராமரிக்க வேண்டும். அச்சிடப்படும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளில் வேட்பாளரின் அனுமதி பெற்ற பின்னா் அல்லது அவருடைய கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னா் அச்சிடப்பட வேண்டும். தவறினால் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 171இன் கீழ் அச்சிட்டோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அச்சடிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் ஜாதி, மொழி, இன அடிப்படையில் விமா்சிக்கும் வாசகங்கள் இருக்கக் கூடாது. தனி நபா்களை இழிவு படுத்தக்கூடிய அல்லது விமா்சனம் செய்யக்கூடிய பிரசுரங்களை அச்சிடக் கூடாது. இத்தகைய, நடைமுறைகளை மீறும் பட்சத்தில் தோ்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.