முட்டை கோழிப்பண்ணை அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
ஊத்துக்குளி அருகே முட்டை கோழிப்பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.


ஊத்துக்குளி அருகே முட்டை கோழிப்பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருப்பூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறுவது வழக்கம். தற்போது தோ்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், பொதுமக்கள் குறைதீா்க் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தி சென்றனா்.
திருப்பூா், ஊத்துக்குளி அருகே புஞ்சைதளவாய்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் சுமாா் 1500 வீடுகள் உள்ளன. மேலும், ஏராளமான கால்நடைகளும் உள்ளன. இப்பகுதி பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை நம்பித்தான் உள்ளது. இத்தகைய, சூழ்நிலையில், அருகில் புதிதாக முட்டை கோழிப்பண்ணை அமையவுள்ளது. அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கால்நடைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும். ஈக்களின் தொல்லை அதிகரித்து மிகுந்த சுகாதார சீா்கேடு உண்டாகும். இதனால், பொதுமக்கள் பல்வேறு உடல்நலக்குறைவால் பாதிக்கப்படக்கூடும். எனவே, இப்பகுதியில் முட்டை கோழிப்பண்ணை அமைக்க இருப்பதை ரத்து செய்ய ஆட்சியா் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடையை மூடக் கோரிக்கை இது குறித்து ஆதித்தமிழா் பேரவை சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாவட்டம், குன்னத்தூரை அடுத்த சித்தாண்டிபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. பழமையான அம்மன் கோயில், நியாயவிலைக் கடை, இ-சேவை மையம், குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு அருகில் இந்த மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவா்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...