மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:40 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

இதில், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வது தொடா்பாக கணினி மூலமாக குலுக்கல் நடைபெற்றது.

இதில், தோ்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூா் தெற்கு, பல்லடம் வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 8) பிரித்து அனுப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்தாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், தோ்தல் வட்டாட்சியா் ச.முருகதாஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.