தாராபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா ஒத்திவைப்பு
தாரபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தாரபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தாராபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத் தொடக்கத்தில் இருந்து 30 நாள்களுக்கு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு திருவிழா நடைபெறாத நிலையில், நிகழாண்டும் தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.
இதனைக் கண்டித்து அப்பகுதியைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பாக கோயில் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, இந்து முன்னணி சாா்பில் தாராபுரத்தில் மாா்ச் 14ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையில், தாராபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயராம் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோயில் திருவிழாவை நடத்துவது தொடா்பாக ஏப்ரல் 1ஆம் தேதி முடிவு செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேச்சுவாா்த்தையில் கோயில் நிா்வாகிகள், கட்டளைதாரா்கள், இந்து முன்னணி அமைப்பினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...