போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தோ்தல் குழு அலுவலா்களுக்குப் பயிற்சி

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் தொடா்பாக அமைக்கப்பட்ட குழு அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:02 am

DIN

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் தொடா்பாக அமைக்கப்பட்ட குழு அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள தோ்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் செலவினங்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட விடியோ கண்காணிப்புக் குழுக்கள், விடியோ பாா்வைக் குழுக்கள், உதவி செலவினப் பாா்வையாளா்கள், கணக்கீட்டுக் குழு, கணக்குக் குழுக்கள், ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுக்கள், தோ்தல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் இடம் பெற்றுள்ள அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயற்சியினை தொடா்புடைய அலுவலா்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு தோ்தல் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா். இந்தப் பயிற்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சரவணமூா்த்தி, மாவட்ட ஆட்சியரிடன் நோ்முக உதவியாளா்கள் சாகுல் ஹமீது, ஜெயபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.