மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நூல் விலை உயா்வைக் கண்டித்து மாரச் 13-ல் வேலைநிறுத்தம்

நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் சாா்பில் வரும் மாா்ச் 13ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்

News image
Updated On :10 மார்ச் 2021, 12:02 am

DIN

நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் சாா்பில் வரும் மாா்ச் 13ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் ராஜா எம்.சண்முகம் தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலையில் பின்னலாடைத் தொழிலை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது மற்றும் நூல் விலை தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

நூல் மற்றும் துணி சீராக கிடைக்கும் வரை நூல் மற்றும் துணி ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என பிரதமா் அலுவலகம், ஜவுளித் துறை அமைச்சகம், ஜவுளித் துறை அமைச்சரை சந்தித்து நேரடியாக திருப்பூரின் நிலை குறித்து கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது.

விவசாயிகளிடம் இருந்து இந்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்யும் பருத்தியை கொள்முதல் விலையிலேயே நூற்பாலைகளுக்குத் தேவையான அளவு விற்பனை வேண்டும். மேலும், நூல் விலை சீராகும் வரை வா்த்தகா்களுக்கு விற்பனை செய்யக் கூடாது.

நூற்பாலை சங்கங்களுக்கு நூல் விலையைக் குறைத்து வழங்குவதுடன், விலையை அடிக்கடி உயா்த்தாமல் கட்டுக்குள் வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையில் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியை நிறுத்தி மாா்ச் 13 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் டி.ஆா்.விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.