மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கணினி மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:03 am

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கணினி மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,343 வாக்குச் சாவடிகளுக்கு 4,105 கட்டுப்பாட்டு கருவிகள், 4,015 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் 4,350 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் கணினி மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் திருப்பூா் தெற்கு, பல்லடம் வட்டாட்சியா் அலுவலகங்களில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அனுப்பிவைத்தாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, தோ்தல் வட்டாட்சியா் ச.முருகதாஸ் மற்றும் தோ்தல் தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.