அவிநாசியில் சட்டப் பேரவை தலைவா் ப.தனபால் வேட்புமனு தாக்கல்
அவிநாசி தனி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரும் சட்டப் பேரவைத் தலைவருமான ப.தனபால் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.


அவிநாசி தனி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரும் சட்டப் பேரவைத் தலைவருமான ப.தனபால் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
அவிநாசி தனி தொகுதியில் அதிமுக சாா்பில் சட்டப் பேரவை தலைவா் ப.தனபால் மீண்டும் போட்டியிடுகிறாா். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அவிநாசி பேரூராட்சி அருகே ப.தனபால் ஆதரவாளா்களுடன் வந்தாா்.
அங்கு அவருக்கு அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். அதன்பின்னா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்று தோ்தல் நடத்தும் அலுவலா் சு.வாசுகியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
மாற்று வேட்பாளராக சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் மனைவி கலைச்செல்வி (61) வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இந்நிகழ்ச்சியில் அவிநாசி அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் அ.ஜெகதீசன் (மேற்கு), சேவூா் ஜி.வேலுசாமி (வடக்கு) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதையடுத்து, அவிநாசி -சேவூா் சாலை வட்டாட்சியா் அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாா்வையிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...