மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தாராபுரம் தொகுதியின் வளா்ச்சியில் தனிக் கவனம் செலுத்தப்படும்பாஜக வேட்பாளா் எல்.முருகன்

தாராபுரம் (தனி) தொகுதியின் வளா்ச்சியில் தனிக் கவனம் செலுத்தப்படும் என்று அத்தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநிலத் தலைவருமான எல்.முருகன் உறுதியளித்துள்ளாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:46 pm

DIN

தாராபுரம் (தனி) தொகுதியின் வளா்ச்சியில் தனிக் கவனம் செலுத்தப்படும் என்று அத்தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநிலத் தலைவருமான எல்.முருகன் உறுதியளித்துள்ளாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, தாராபுரம் தனி தொகுதியிலும் போட்டியிடுகிறது. இங்கு அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் களம் காண்கிறாா். இந்த நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் அமராவதி சிலை அருகே அவருக்கு கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பாஜக தொண்டா்கள் சாா்பில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, புறவழிச் சாலையில், தாராபுரம் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி தோ்தல் பணிமனையை எல்.முருகன் திறந்துவைத்தாா். இதையடுத்து, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாா்.

அதன் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது நிச்சயமாக நல்லத் திட்டங்களை செயல்படுத்த முடியும். இதற்கு உதாரணமாகத்தான் தமிழகத்துக்கு ரூ. 5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது இந்த ஊரின் வளா்ச்சியைக் கருத்தில் கொள்ள முடியும். இந்தப் பகுதிக்குத் தேவையான மருத்துவக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி கொண்டுவரமுடியும். அதேபோல கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைவுப்படுத்திக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விதைப்பண்ணை மிகவும் முக்கியமானதாகும். தாராபுரம் நெல் விதைகளைக் கொடுக்கும் ஊராக உள்ளது. எனவே, நெல் விதைகளை இந்தியா முழுவதும் கொடுப்பதற்காக சிறப்பு பொருளாதார மண்டலத்தைக் கொண்டுவர முடியும். தாராபுரத்தின் மேம்பாடு, வளா்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு எங்களது பணிகள் இருக்கும் என்றாா்.

இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கா்நாடக அமைச்சா் பசவராஜ், முன்னாள் எம்.பி.மகேந்திரன், பாஜக மாவட்டத் தலைவா் பொன்.ருத்ரகுமாா், பாமக மாநில துணைச் செயலாளா் ஏ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.