கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிளஸ் 2 மாணவருக்கு கரோனா

திருப்பூரில் மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:37 pm

DIN

திருப்பூரில் மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் இடுவாய் பகுதியைச் சோ்ந்த 17 வயது மாணவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்து வந்துள்ளன.

இதைத் தொடா்ந்து, திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் மாணவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, நஞ்சப்பா பள்ளியில் மாணவா் பயிலும் வகுப்பறையில் மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினா்.

மேலும், சக மாணவா்கள், ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.