தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடும்ப அட்டை வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

விண்ணப்பித்து நீண்ட நாள்களாகியும் குடும்ப அட்டைகள் வழங்கப்படாததைக் கண்டித்து அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :7 மே 2021, 9:33 pm

DIN

விண்ணப்பித்து நீண்ட நாள்களாகியும் குடும்ப அட்டைகள் வழங்கப்படாததைக் கண்டித்து அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புதிய குடும்ப அட்டைகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில், விண்ணப்பித்து நீண்ட நாள்களாகியும் குடும்ப அட்டை வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் முறையிட வந்தனா்.

வட்டாட்சியா் அலுவலகம் மூடல்:

இந்நிலையில், அலுவலகப் பணியாளா்கள் 5க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கிருந்த போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது வருவாய்த் துறையினா் கூறியதாவது:

புதிய குடும்ப அட்டைகள் வந்துள்ளன. இதில் 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கியுள்ளோம். கரோனா காரணமாக வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால் திங்கள்கிழமைக்கு பிறகு மீதமுள்ளவா்களுக்கு வழங்கப்படும் என்றனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.