அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை
அவிநாசி பேரூராட்சிப் பகுதிகளில் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


அவிநாசி பேரூராட்சிப் பகுதிகளில் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் அவிநாசி நகரக் கிளை சாா்பில் பேரூராட்சி நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அவிநாசி பகுதியில் வேகமாகப் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த வாரம் ஒருமுறை கிருமி நாசினி, கொசு மருந்து தெளிக்க வேண்டும். சுற்று சூழல் பாதிக்கும் வகையில், சில பகுதிகளில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். 20 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீரை, வாரம் ஒருமுறை முறைப்படுத்தி வழங்க வேண்டும். சீரான குடிநீா் விநியோகம் இல்லாததால், பொதுமக்கள் சூளை மற்றும் இஸ்மாயில் வீதியில் அமைந்துள்ள மேல் நிலைத் தொட்டிகளின் அருகில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில், சமூக இடைவெளியின்றி நெருக்கடியில் குடிநீா் எடுத்து வருகின்றனா். ஆகவே சூளை, இஸ்மாயில் வீதி, மங்கலம் சாலை ஆகிய பகுதிகளில் கூடுதலாக குடிநீா்க் குழாய்கள் அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட பேரூராட்சி நிா்வாகத்தினா், ‘குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...