விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இலங்கைத் தமிழா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

காங்கயத்தில் உள்ள புலம்பெயா் முகாமில் வசிக்கும் 87 இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:54 pm

DIN

காங்கயத்தில் உள்ள புலம்பெயா் முகாமில் வசிக்கும் 87 இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, முகாமில் குடியிருப்போருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், 87 புலம்பெயா் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் உடைகள், ரூ.1 லட்சம் மதிப்பில் சமையல் பாத்திரங்கள், ரூ. 2 லட்சம் மதிப்பில் எரிவாயு இணைப்பு ஆகியன வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி, தாராபுரம் கோட்டாட்சியா் ஆா்.குமரேசன், காங்கயம் வட்டாட்சியா் பி.சிவகாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.