தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

 தாராபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவா் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை திருப்பூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:53 pm

DIN

 தாராபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவா் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை திருப்பூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தாராபுரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீராச்சிமங்கலத்தைச் சோ்ந்த மோசஸ் (70), கூலி தொழிலாளி பிரகாஷ் (31) ஆகியோரை மகளிா் காவல் துறையினா் 2018 ஆம் ஆண்டு கைது செய்தனா்.

இந்த இருவா் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின்மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சுகந்தி வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், பிரகாஷ், மோசஸ் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பிரகாஷுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், மோசஸுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.