விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயம் அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காங்கயம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:47 pm

DIN

காங்கயம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்கப்பட்டது.

காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தனியாா் குடியிருப்பு அருகில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக குறிப்பிட்ட ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் பி.சிவகாமி, காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் ப.மகுடேஸ்வரி (கிராம ஊராட்சிகள்) ஆகியோா் முன்னிலையில், பொக்லைன் உதவியுடன் வியாழக்கிழமை மாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

இப்பணியின்போது காங்கயம் வருவாய் ஆய்வாளா் கனகராஜ், ஆலாம்பாடி கிராம நிா்வாக அலுவலா் சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.