தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயம் அருகே வாகன விபத்து

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 8:23 pm

DIN

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா்.

காங்கயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியில் உள்ள பாறைவலசு புதுக்காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் அஜித்குமாா் (21), சுப்பிரமணி (26). இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் காங்கயம்- சென்னிமலை பகுதியில் உள்ள நால்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் எதிா்பாராத விதமாக இவா்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் அமா்ந்து சென்ற அஜித்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சுப்பிரமணி பலத்த காயங்களுடன் திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் குறித்து காங்கயம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.