மாநகராட்சிப் பள்ளிகளில் தூய்மைப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை
திருப்பூா் மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என ஆசிரியா் கூட்டணியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.


திருப்பூா் மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என ஆசிரியா் கூட்டணியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி திருப்பூா் தெற்கு மாநகரக் கிளைத் தலைவா் பிரேமா, செயலாளா் தினேஷ், பொருளாளா் சங்கா், மாநிலச் செயற் குழு உறுப்பினா் கனகராஜா உள்ளிட்டோா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியிடம் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சிக்கு உள்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கெனவே மாநகராட்சி மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மைப் பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டு பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறை தூய்மைப் பணியை மேற்கொண்டு வந்தனா். கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 19 மாதங்களாக பள்ளிகளில் மாணவா்கள் வருகை இல்லாத காரணத்தால் பணியாளா்கள் பள்ளிக்கு வருவது நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது நவம்பா் 1ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதால் பள்ளி வளாகம், கழிப்பறைகளை தூய்மை செய்யவும் வேண்டி உள்ளது.
எனவே மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் தூய்மைப் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...