40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காங்கயம் பகுதியில் கடைகளுக்கு விற்பனை செய்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காங்கயம் பகுதியில் கடைகளுக்கு விற்பனை செய்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகில் உள்ள அழகாபுரத்தைச் சோ்ந்தவா் கந்தப்பழம் (48).

இவா் தற்போது காங்கயம் அடுத்துள்ள படியூரில் வசித்து வருகிறாா்.

இவா் பிரபல பீடி நிறுவனத்தின் பீடிகளைப் போன்று போலி பீடிகளையும், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த காங்கயம் காவல் துறையினா் படியூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பண்டல்களுடன் சென்ற கந்தப்பழத்தை பிடித்துச் சோதனை நடத்தினா்.

அப்போது 212 போலி பீடி பண்டல்கள், 367 தடைசெய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கந்தப்பழத்தை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த போலி பீடி பண்டல்கள், புகையிலைப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com