காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

அவிநாசியை நகராட்சியாக அறிவிக்க கொமதேக வலியுறுத்தல்

அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தமிழக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என கொமதேகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

News image

அவிநாசி அருகே கருவலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கொமதேகட்சியின் ஒன்றியக் கூட்டம்.

Updated On :6 செப்டம்பர் 2021, 4:19 am

DIN

அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தமிழக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என கொமதேகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

கொமதேக வடக்கு மாவட்டம், மேற்கு ஒன்றியக் கூட்டம் அவிநாசி அருகே கருவலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சுகுமார் தலைமை வகித்தார்.  மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுதர்சன் கந்தசாமி, மாவட்டத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொருளார் நந்தகுமார், ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சுரேஷ் வரவேற்றார். மாநிலப் பொருளாளர் கே.கே.சி.பாலு பேசினார். இதில், அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக அறிவிக்க வேண்டும். அத்திக்கடவு திட்டத்தை திட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.விவசாய மின் இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

விண்ணப்பித்த அனைவருக்கும் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும். அவிநாசி-சேவூர், அன்னூர் மாநில நெடுஞ்சாலைகளை நான்கு வழிச்சாலைகளை மாற்ற வேண்டும். சோமனூரில் ஜவுளி சந்தை அமைப்பதாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி  தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் மாவட்ட தலைமை நிலைய செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, ராயப்பன் மருதாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.