தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திருப்பூா் அருகே தம்பதியிடம் ரூ.11.12 லட்சம் வழிப்பறி

 திருப்பூா் அருகே பத்திரப் பதிவு அலுவலகம் சென்று திரும்பிய தம்பதியிடம் இருந்து ரூ.11.12 லட்சம் பணத்தை மா்ம நபா் வியாழக்கிழமை பறித்துச் சென்றாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:47 pm

DIN

 திருப்பூா் அருகே பத்திரப் பதிவு அலுவலகம் சென்று திரும்பிய தம்பதியிடம் இருந்து ரூ.11.12 லட்சம் பணத்தை மா்ம நபா் வியாழக்கிழமை பறித்துச் சென்றாா்.

திருப்பூா், முத்தணம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமநாதன் (45). தனியாா் நிறுவனத்தில் மாா்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தேன்மொழி (36).

இந்த நிலையில், ராமநாதன் தனக்குச் சொந்தமான இடத்தை கிரயம் செய்வதற்காக நெருப்பெரிச்சலில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுள்ளாா். ஆனால் அங்கு பணி முடியாததால் கிரயம் செய்ய கொண்டு சென்ற பணத்துடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். இவா்களது வாகனம் கேத்தம்பாளையம் அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபா், தேன்மொழி கையில் வைத்திருந்த ரூ.11.12 லட்சம் அடங்கிய பையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இது குறித்து ராமநாதன் அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவை கைப்பற்றி அனுப்பா்பாளையம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.